சந்திரபாபு நாயுடு!! ரேகா குப்தா வருகை! தமிழகத்தை முற்றுகையிட்ட தேஜ கூட்டணி முதல்வர்கள்!!
திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெறவும் இவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இந்த முறை காணப்படும் முக்கிய மாற்றமாக, வெளிமாநில முதல்வர்களின் தீவிர பிரசாரம் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, பல மாநில முதல்வர்கள் நேரடியாக தமிழகம் வந்து பிரசாரம் செய்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேஜ கூட்டணியை ஆதரித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் (Mohan Yadav), மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis), ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma), அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma), டெல்லி முதல்வர் ரேகா குப்தா (Rekha Gupta) மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) உள்ளிட்டோர் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
மறுபுறம், திமுக கூட்டணியை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் (D. K. Shivakumar), டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மற்றும் பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav) ஆகியோர் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நானும் திராவிடன்தான்!! அத மறந்துராதீங்க!! சென்னையில் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரம்!
இதில் அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பல முதல்வர்கள் வருகை தந்த நிலையில், ‘இண்டி’ கூட்டணியின் முக்கிய முதல்வர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), கர்நாடக முதல்வர் சித்தரமைய்யா (Siddaramaiah) மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (Revanth Reddy) ஆகியோர் பிரசாரத்தில் பங்கேற்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், “தேஜ கூட்டணி முதல்வர்களுக்குள் உள்ள ஒற்றுமை, இண்டி கூட்டணி முதல்வர்களுக்குள் இல்லை. பாஜ கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கும் இண்டி கூட்டணி கட்சிகள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருப்பதில்லை. இவர்கள் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” என்கின்றனர்.
இவ்வாறு, இண்டி கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை குறைவு, தேஜ கூட்டணிக்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறியுள்ளது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தேர்தல் முடிவில் இந்த பிரசாரங்களின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!