பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!
என்எல்சி நிறுவனம் திமுக அமைச்சர் தொகுதிகளுக்கு சி எஸ் ஆர் நிதி ஒதுக்கினால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
விருத்தாசலம் அருகே பெண்ணாடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நெய்வேலி என்எல்சி மத்திய நிறுவனம் திமுக அமைச்சர் தொகுதிகளுக்கு மட்டும் சிஎஸ்ஆர் நிதி ஒதுக்குவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்படி என்எல்சி அதிகாரிகள் மீண்டும் சி எஸ் ஆர் நிதி ஒதுக்குவதில் ஈடுபட்டால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணியில் புவனகிரி தொகுதியில் 38,000 இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
விஜய் கரூர் நிகழ்ச்சியில் காலதாமதமாக வந்தது தவறு தான். அந்தக் கூட்டத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு யார் காரணம்? காவல்துறையும் மின்சார துறையும்தான். மின்சாரத்தை நிறுத்தியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: "செங்கோட்டையன் பின்னணியில் திமுக..." - போட்டுத் தாக்கிய நயினார் நாகேந்திரன் ...!
செங்கோட்டையன் போயிட்டார் போயிட்டார் என்று பத்திரிகையாளர்கள் கேட்கின்றார்கள், ஆனால் செங்கோட்டையன் அவர்கள் எங்கும் போகவில்லை இங்கேதான் இருக்கிறார். செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வதற்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் முதலில் சேகர் பாபுவை சந்தித்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுள்ளார். அவர் கழுத்திலும் துண்டும் போட்டுள்ளார்.
2026 தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் சில கட்சிகள் ஒன்று திரண்டு திமுகவை வீழ்ச்சி அடைய வைக்க வேண்டும்.தமிழகத்தில் 2026 இல் எடப்பாடியார், மோடி இருவரும் ஒன்று கூடி யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பார்கள்.
வருகின்ற ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து பாஜக, அதிமுக மற்றும் யார் யார் கூட்டணி என்று தெளிவாக அறிவிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! - பாஜக சார்பில் போட்டியிடும் “சோனியா காந்தி” - காங்கிரஸை எதிர்த்து களமிறங்கிய சுவாரஸ்சியம்...!