×
 

இன்னும் ஒரு வாரம் தான்!! தேமுதிக - பாமக கூட்டணிக்கு டைம் குறித்த நயினார்! பலமாகும் NDA கூட்டணி!

தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுமா? புதிய கட்சிகள் இணையுமா? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு கடந்த 23ஆம் தேதி தான் பதில் கிடைத்துவிட்டது என நயினார் நாகேந்திரன் கூறினார்.

நெல்லையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) விரிவாக்கம் குறித்து அவர் அளித்த பதில்கள் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணி பலப்படுமா? புதிய கட்சிகள் இணையுமா? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு கடந்த 23ஆம் தேதி தான் பதில் கிடைத்துவிட்டது. இன்னும் சில கேள்விகளை வைத்திருக்கிறீர்கள். பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் என்டிஏ-வில் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று. அதற்கான பதில் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும்.”

இந்த பதில் மூலம், தமிழகத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மேலும் விரிவடையும் வாய்ப்பு இருப்பதை நயினார் நாகேந்திரன் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்களே இப்படி பண்ணலாமா? உட்கட்சி பூசலால் உடைகிறது தவெக?! புலம்பி தவிக்கும் விஜய்!

குறிப்பாக தேமுதிக (பிரேமலதா விஜயகாந்த்) மற்றும் பாமக (ராமதாஸ் தரப்பு) ஆகிய இரு கட்சிகளும் என்டிஏ-வில் இணையும் வாய்ப்பு குறித்து அடுத்த ஒரு வாரத்தில் தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அதிமுக-பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக (டிடிவி தினகரன்), பாமக (அன்புமணி தரப்பு), தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பு இணைந்தால் கூட்டணியின் வாக்கு வலிமை பெருமளவு அதிகரிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

இதேவேளையில் திமுக தரப்பு விஜய் தலைமையிலான தவெகவை தனித்து நிற்க விடாமல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே அடுத்த ஒரு வார காலம் தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: அரியணை ஏறுவாரா விஜய்? தவெக முன்னாள் இருக்கும் சவால்கள்?! தவிக்கும் தொண்டர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share