திருமாவளவன் விரும்புவது இதைத்தான்... திமுக கூட்டணியில் குண்டை போட்ட நயினார் நாகேந்திரன்!!
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியில் வர வேண்டும் என்பதே விருப்பம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது முதலே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதேபோல், திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் மக்களிடையே விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை.
இதையும் படிங்க: சரியும் செல்வாக்கு; திமுகவுடன் கூட்டு சேர்ந்ததால் தான் எல்லாம் போச்சு.. புலம்பி தீர்த்த திருமா..!
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இருந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பாஜக யாரையும் பின்னணியில் இருந்து இயக்கவில்லை. பாமக ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தார். தொடர்ந்து பாமக கூட்டணியில் வர வேண்டும் என்பதே விருப்பம்.
அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்து போக வேண்டும் என்று திருமாவளவன் விருப்பப்படுகிறார். ஆனால் எனக்கு திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளிவர வேண்டும் என்பதே விருப்பம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக கூட்டணியை பிரிக்க அதிமுக – பாஜக முயல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!