×
 

அரச்ச மாவையே அரைக்கும் பட்ஜெட்..!! DMK ALL FAIL... நயினார் விளாசல்..!!

பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவர் நைனார் ராகவேந்திரன் திமுக அரசின் மீது வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார்.

அப்போதும் கூட திமுகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு நைனார் நாகேந்திரன் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மக்கள் பணியில் கவனம் தேவை என குறிப்பிட்டு திமுக விடிய ஆட்சியின் மதிப்பின் அட்டையை நயினார் நாகேந்திரன் வழங்கினார். 

இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று சட்டப்பேரவைக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய போது, எதிர்கால திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது எதிர்காலத்தில் ஆட்சியில் அமர மாட்டார்கள் என்பதையே காட்டுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக நீதியைக் காப்பாற்றும் திராவிட மாடல்..! நிதி தராமல் அலைக்கழிக்கும் பாஜக... அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு இடத்தில் பேசும் போது 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுவதாகவும் மற்றொரு இடத்தில் 90% என்று தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும் போது 75 முதல் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக மாற்றி மாற்றி கூறி வருகிறார்கள் என்று தெரிவித்தார். எனவே திமுக அளித்த வாக்குறுதிகளை லிஸ்ட் எடுத்து எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்கள் எதையெல்லாம் நிறைவேற்றவில்லை என்று பட்டியலிட்டு இருப்பதாகவும் கூறினார். அதில் பார்த்தால் திமுக ஆல் பெயில் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: மணிப்பூரை பார்... வாய்ச்சவடால் விட்ட முதல்வர்... புள்ளி விவரத்தோடு விளாசிய பாஜக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share