×
 

நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

நீட் மறுதேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறி தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த முறைகேடு நடந்திருந்தாலும் முதல் முறையாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார். நீட் மறுதேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மறு தேர்வு நடத்தும் முடிவை கையிட வேண்டும் என்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான இடங்களை மாநில அரசுகளை நிரப்பி கொள்ள அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் மேலும் அந்த கடிதத்தில் நீட் தேர்வில் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும்,  வினாத்தாள் கசிவினை தொடர்ந்து 2026ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மிகுந்த கவலையோடு இந்த கடிதத்தை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டிருக்கும் நிலையில், சிபிஐ விசாரணையும் நடக்கிறது. 22.8 லட்சம்  மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் என தெரியாமல் தவிக்கிறார்கள் என்றும், இப்படி நடப்பது முதல் முறை அல்ல 2015ஆம் ஆண்டு நீட் அறிமுகப்படுத்துவதற்கு முன் நடத்தப்பட்டஏபிஎம்டி தேர்வின் போது ப்ளூடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள்கள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதையும், உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். 

2016 ஆம் ஆண்டு நீட் தேர்வினுடைய இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள்கள் கசிவு புகார் எழுந்திருக்கின்றன என்றும், ஆனால் அப்போது மறுத்தேர்வு நடத்தப்படவில்லை என்றும் 2017ஆம் ஆண்டு ஆள்மாறாட்ட புகார்கள் எழுந்தன என்றும் ஆனால் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது. மொழி பெயர்ப்புகள் தவறாக இருந்தன இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியாகிறது என்றும் பல்வேறு காரணங்களை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி வருகிறார்.

இப்படியாக தொடக்கம் முதலே ஏழை எளிய, கிராமப்புற அரசு பள்ளியில் தமிழில் பயின்ற, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு இருக்கிறது என்றும் தகுதி என்று சொல்லிவிட்டு பணம் குளிக்கும் வணிக பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுடைய தேர்வாக இது இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். நீட் மூலமாக தொடர்ச்சியாக 70ஆயிரம் கோடி ரூபாய் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இதை வைத்து மையத்தொழிலாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மையங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே இந்த தேர்வினை முழுமையாக ரத்து செய்துவிட்டு 12 ஆம் வகுப்பு எடுத்த மாணவ மாணவ மாணவிகளுடைய  மதிப்பின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்கும் உடனடியாக அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க: புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share