தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!
ஜான்பாண்டியன் உள்ளிட்ட 4 பேரின் கட்சி பதிவு செய்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதத்தால் அவைகளை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட இந்திய தயார் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
ஒரு அமைப்பானது அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் நோக்கம் இந்திய தேர்தல் ஆணையிட்டால் நடத்தப்படும் தேர்தலில் பங்கேற்பதாகும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
அத்தகைய கட்சிகளுக்கு அவர்களின் பதிவினை ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் அலுவலரால் விளக்கம் கூறும் அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பீகார் 'வாக்கு திருட்டு' விவகாரம்.. நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியீடு..!
இதில் நெல்லை மாவட்டத்தில் முகவரியை கொண்டு செயல்படும் அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, பச்சை தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய நான்கு அரசியல் கட்சிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கண்ட கட்சிக்கு தங்கள் தரப்பு கருத்துக்களை நேரில் எடுத்துரைத்திட வாய்ப்பு அளிக்கும் விதமாக சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 26.8. 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் நேரில் ஆஜராகிட மேற்குறிப்பிட்ட கட்சியின் தலைமை பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடி உற்ற பின்னர் தமிழ்நாடு தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரியால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இதன் பேரில் இந்திய தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் 4வதாக குறிப்பிடப்பட்டுள்ள கட்சி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படியா அவமதிப்பீங்க? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் கறார்..!