கொத்து கொத்தாய் வாக்காளர்கள் நீக்கம்... நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியிலேயே ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்...!
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொந்த தொகுதியிலேயே 42,119 வாக்காளர்களை பறித்துக் கொண்ட எஸ்.ஐ.ஆர்
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் என்று சொல்லக்கூடிய வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதற்கு ஆரம்பத்திலேயே திமுக கூட்டணி கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஐ.ஆர் பணிகளால் வாக்காளர்கள் உரிமை பறிபோகும், வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தனர்.
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடந்தால் இரட்டை வாக்காளர்கள், கள்ள ஓட்டு போடுவது உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படும் எனவே எஸ்.ஐ.ஆர் பணிகள் வேண்டுமென அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகளால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு தமிழகத்திலும் அதே போல் பிரச்சனையை ஏற்படுத்த நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
எதற்குமே செவி சாய்க்காத இந்திய தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் பணிகளை தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிரமாக செய்து வந்தது. இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என்று சொல்லக்கூடிய அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்குரிய படிவங்களை வழங்கி அதை மீண்டும் பெற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
இதையும் படிங்க: குப்பைகளை அகற்ற திராணி இல்லையா இல்ல மனசு இல்லையா? அண்ணாமலை கைது… நயினார் கடும் கண்டனம்…!
இந்தப் பணிகளால் மாநிலம் முழுவதும் பல்வேறுஇயல்பு பணிகள் முடங்கி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மன உளைச்சலில் பாதிக்கப்படும் நிலையும் இருந்தது. இருந்தபோதிலும் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதுமே இறுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வாக்காளர் இறுதி வரைவு பட்டியலை இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இதில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 14,18,325 வாக்காளர்கள் இருந்தனர். எஸ் ஐ ஆர் பணிகளுக்கு பிறகு தற்போது 22,03,368 என்ற அடிப்படையில் தற்போது 5 தொகுதிகளிலும் மொத்தமாக சேர்த்து 2,14,957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் வாக்குரிமையை இழக்க நேரிட வாய்ப்பு இருக்கிறது.
இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியான நெல்லை தொகுதியிலும் 42,119 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: “ஆடு நனையுதே என யாரோ கவலைப்பட்ட மாதிரி...” - உதயநிதியை நோஸ்கட் செய்த நயினார் நாகேந்திரன்...!