மிஸ் கிட்டயே சொல்றியா? சக மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… அதிர்ச்சியூட்டும் காரணம்…!
நெல்லையில் மாணவனை சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரம் மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. அதுவும் இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப் பொருட்கள் பழக்கம் இருப்பது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது. போதிய விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அதன் புழக்கத்தை வேரோடு பிடுங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.
புகையிலை, கஞ்சா உள்ளிட்டவற்றின் புழக்கம் பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. சர்வ சாதாரணமாக போதைப் பொருட்களை மாணவர்கள் கையாளும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புகையிலைப் பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் தன்னுடன் பயின்று வரும் சக மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளார். புத்தகத்தில் அரிவாளை மறைத்து கொண்டு வந்து வெட்டியது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாணவன் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது விசாரணை நடத்தியதில், வெட்டியதற்கான காரணத்தை அந்த மாணவர் கூறி இருக்கிறார். புகையிலைப் பொருட்களை பள்ளிக்கு கொண்டு வந்ததாகவும், அதனை அந்த சக மாணவன் ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் பயமா தான்யா இருக்கு! வெறிபிடித்த வளர்ப்பு நாய்... 14 பேரை கடித்துக் குதறிய சம்பவம்...!
இதனால் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டியதாக கூறப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை எடுத்து வந்த விவகாரத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் புதிய விண்வெளி மையம்! கட்டுப்பாடு மையம் அமைக்க டெண்டர் கோரிய இஸ்ரோ...