தவெக கொடி பறக்குதா? - ஜனார்த்தனனை தூக்கியடித்த ஜெயலலிதா... எடப்பாடி மறந்த பீதி கிளப்பும் பிளாஷ்பேக்...!
இன்று தனித்து தான் போட்டியிடுவேன் என அடம்பிடிக்கும் விஜயை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தனது சொந்தக் கட்சி கூட்டத்திலேயே அதிமுக தொண்டர்களை வைத்து தவெக கொடியை பிடிக்க வைத்துள்ளார்.
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார சுற்று பயணத்தை தொகுதிவாரியாக மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டபோது கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோசமிட்டனர். உடனே எடப்பாடி பழனிச்சாமி, “பாருங்க கொடி பறக்குது. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஸ்டாலின் அவர்களே இந்த ஆராவரம் உங்க செவியை துளைக்கும்” என்றெல்லாம் பேசினார்.
அடுத்த நாளே தவெக கொடியை பிடித்தவர் அதிமுக தொண்டர் என போட்டோக்கள் வெளியாகின. தன் கட்சியின் தொண்டர்களை வைத்தே விஜயின் தவெக கொடியை தனது கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி பிடிக்க வைத்திருக்கிறார். விஜயின் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டார். அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, ரஜினியின் படத்தை போஸ்டரில் போட்டதற்காக ஜெயலலிதாவால் கட்சியை விட்டே தூக்கியடிக்கப்பட்ட ஜனார்த்தனனின் பிளாஷ்பேக் ஸ்டோரி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. அதே காலக்கட்டத்தில் பாபா திரைப்பட விவகாரத்தில் ரஜினிகாந்திற்கும் ராமதாஸுக்கும் இடையே உச்சக்கட்ட சர்ச்சை நிலவியது. அதற்காக வஞ்சம் தீர்க்க காத்திருந்த ரஜினிக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. பாமக போடியிட்ட தர்மபுரி, செங்கல்பட்டு, சிதம்பரம், அரக்கோணம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய ஆறு தொகுதிகளிலும் ஆதிமுகா பாஜாக்கா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். பாமாக்காவை தோர்க்கடிக்க
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியில் தெறிக்கவிட்ட விஜய்... ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி... விண்ணை பிளந்த சத்தம்..!
ஆறு தொகுதிகளில் ரசிகர்கள் தேர்தல் பணியாற்ற ரஜினிகாந்த் ஒப்புதல் அளித்தார். 1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சாபமிட்டவர் ரஜினி. ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் நிலை மாறி போயிருந்தது. ராமதாசை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அதிமுக பாஜாகா கூட்டணியை ஆறு தொகுதிகளில் ரஜினி ஆதரித்தார். ஆனால் அந்த ஆதரவை ஜெயலலிதா ஏற்கவில்லை.
ஆனால் ரஜினியே வந்து ஆதரவு கொடுத்தது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சென்னையைச் சேர்ந்த அதிமுக 70வது வட்டச் செயலாளர் ஜனார்த்தனன் கீழ்பாக்கத்தில் உள்ள ஒயின் ஷாப்பின் சுவரில் ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்தோடு ரஜினியின் படத்தையும் போட்டு தேர்தல் விளம்பரமாக வைத்திருந்தார். இது பத்திரிக்கைகளில் வெளியானதும் ரஜினி படத்தை நீக்க வேண்டும் என மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்கா சொன்னார். உடனே ரஜினி படத்தை நீக்கி விட்டார் ஜனார்த்தனன். ஆனாலும் ஜனார்த்தனனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜெயலலிதா நீக்கினார்.
அப்படி ஒரு விளம்பர போர்டு வைத்திருக்கும் விஷயமே எனக்கு தெரியாதுமா என பாலகங்கா சொன்னது எடுபடவில்லை. இதே மாதிரி எங்கேயும் நடக்கக்கூடாது. அப்படி எதுவும் நடந்தால் வேட்பாளர்களை மாத்த வேண்டி இருக்கும் என கடுமையாக எச்சரித்து பாலகங்காவை அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. அதுக்கு பிறகுதான் ஜனார்த்தனன் கட்சியிலிருந்து நீக்கும் உத்தரவு பறந்து வந்தது. இத்தனைக்கும் கட்சி தகராறில் ஜனார்த்தனின் வலதுகை வெட்டப்பட்ட நிலையிலும் அதையும் மீறி கட்சிக்காக பாடுபட்டவர் ஜனார்த்தனன். அப்படிப்பட்டவரையே ரஜினி படம் போட்டதற்காக கட்சியை விட்டு தூக்கி அடித்தவர் ஜெயலலிதா.
ஆனால் இன்று தனித்து தான் போட்டியிடுவேன் என அடம்பிடிக்கும் விஜயை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தனது சொந்தக் கட்சி கூட்டத்திலேயே அதிமுக தொண்டர்களை வைத்து தவெக கொடியை பிடிக்க வைத்துள்ளார். இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்குமா? என்ற விமர்சனங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஜெ.வின் வருமான வரி பாக்கி: ஜெ.தீபாவுக்கு ட்விஸ்ட்.. சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..?