×
 

ஜெயலலிதா பாணியில் தெறிக்கவிட்ட விஜய்... ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி... விண்ணை பிளந்த சத்தம்..!

திருச்சியைத் தொடர்ந்து நாகையிலும் மக்களிடையே உரையாற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சொன்னீர்களே செய்தீர்களா? என்று ஜெயலலிதா பாணியில் பிரசாரம் மேற்கொண்டார்.

செய்வீர்களா? செய்வீர்களா? என தனது பிரச்சாரத்தின் போது மக்களை நோக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்புவார். அதேபோல் திருச்சியைத் தொடர்ந்து நாகையிலும் மக்களிடையே உரையாற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சொன்னீர்களே செய்தீர்களா?" என்று ஜெயலலிதா பாணியில் பிரசாரம் மேற்கொண்டார்.

நாகப்பட்டினத்தில்  மண்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் இதனால்  மீனவர்களின் வாழ்வாதாரமும் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்கும். செய்தார்களா?. கடலோர கிராமங்களை  மண் அரிப்புகளிலிருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகளில் இருந்து தடுத்து நிறுத்துவதை காட்டிலும் இந்த அரசுக்கு முக்கிய பணி.சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும்,சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் அவரகளுக்கு  முக்கியமான வேலையாக உள்ளது.

இங்கு உள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கும் போது காவிரித் தண்ணீரை கொண்டு வந்து மக்களின் தாகத்தை இந்த அரசு தீர்த்ததா? அதற்கு இந்த அரசு தீர்வு கண்டதா?, பாரம்பரிய கடல் சார்ந்த இந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்தார்களா?, மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை வேலைவாய்ப்பு கொண்டு வரும் வகையில் தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா??

இதையும் படிங்க: “இருந்த ஒரு மேட்டரும் போச்சே”... சீமான் தலையில் இடியை இறங்கிய விஜய்... அதிர்ச்சியில் நாதக...!

வெளிநாடு சென்று டூர் போயிட்டு வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா?. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலீடா? அல்லது உங்க குடும்பத்துடன் முதலீடு வெளிநாட்டுக்கு போகுதா??

வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை என இங்கு உள்ள சுற்றுலா தலங்கள் எல்லாம் கொஞ்சம் மேம்படுத்தலாம் அதை செய்தீர்களா?, வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கான வசதிகள் செய்து கொடுக்கலாம் செய்தார்களா???, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் இல்லையாம், தெரியுமா??, நாகப்பட்டினம் புது பேருந்து நிலையத்தை யாவது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து உள்ளார்களா?

நாகப்பட்டினம் ரயில்வே வேலையை துரிதமாக முடிக்கலாம் செய்தார்களா?, இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில்,  ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மூடியதை மீண்டும் திறந்தால் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும் ஏன் அதைப்பற்றி சிந்திக்கவில்லை?, மேலக்கோட்டை வாசல் மேம்பாலம் கட்டி 50 வருடங்கள் ஆகிறது அதனை முறையாக மேம்படுத்தலாம், செஞ்சாங்களா?

தஞ்சாவூர் -  நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வேலை பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அதனை வேகமாக செய்யலாம் செய்தார்களா?, நெல் மூட்டைகள் மழை காலங்களில் நனைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் அதற்கு ஒரு குடோன் கட்டி தந்தார்களா?, தேர்தலுக்கு முன்பு  இதையெல்லாம் செய்வோம்  என்று சொன்னாங்களே செஞ்சாங்களா?, இவை எதையுமே செய்யாமல் செய்ததாக பெருமையாக சொல்கிறார் முதல்வர் என ஒவ்வொரு கேள்வியாக விஜய் மக்களை நோக்கி முன்வைக்க, வைக்க அங்கிருந்தவர்கள் விண்ணதிர ‘இல்லை’ என முழக்கமிட்டனர். 

இதையும் படிங்க: “இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாதீங்க”- மு.க.ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share