×
 

இது வெட்கக்கெடு BRO... அஜித்திற்கு வந்தால் தக்காளி சட்னி... விஜய்க்கு வந்தால் ரத்தமா? - அம்பலமான தவெக...!

கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து விஜய் பேசியது எல்லாமே இப்போது கரூர் சம்பவத்தில் அவருக்கே பொருந்தி போவதாக கூறப்படுகிறது. 

அன்று அஜித்குமார் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதை விஜய் கடுமையாக விமர்சித்தார். ஆனால் சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசிய விஜய் தன்னை மன்னித்து விடும் படி மன்றாடி கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விஜயால் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை எப்போது அவர்களது கைகளை சென்றடையும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையெல்லாம் விட ஹைலைட்டாக அஜித் குமார் மரண வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைக் கோரிய விஜய், கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டாம் எனக்கு சிபிஐ விசாரணை தான் வேண்டும் என அடம்பிடித்து வருகிறார். இதற்கான பகீர் காரணங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு, தவெகவினரை எதிர் தரப்பினர் டாரு, டாராக கிழிக்கும் நிலை உருவாகியுள்ளது.  

இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே... தவெக தொண்டனை தொட்டால் அதிமுக சும்மா விடாது... பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்...!

அதாவது கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சிகளை ஜனநாயகன் படக்குழு படம்பிடித்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை தமிழ்நாடு அரசின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் இறங்கினால்,  கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட  காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். 

மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய்  SIT க்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கூறுகிறார். மேலும் SIT விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடை வாங்கி, சிபிஐ விசாரணை வாங்கிவிட்டால்... தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நினைப்பதாகவும் கூறப்படுகிறது. 

பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், எங்கே கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது. எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைத்து கடிவாளத்தை பாஜக இறுக்கி பிடித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

இதை எல்லாம் கேள்விப்பட்ட நெட்டிசன்களோ, அஜித்குமாருக்கு வந்தால் தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தால் ரத்தமா? இதெல்லாம் வெட்கக்கேடானது ப்ரோ என விஜயை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தவெக நிர்வாகி மதியழகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்... அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share