×
 

இது புதுசா இருக்குண்ணே... தவெக தொண்டனை தொட்டால் அதிமுக சும்மா விடாது... பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்...!

தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும் என்று திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக, தட்டான் தோட்டம் பகுதியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனை திட்டங்கள் மற்றும் திமுக அரசு பதவி ஏற்ற இந்த நான்கரை  ஆண்டுகளில் மக்கள் படும் வேதனைகளை விளக்குவதுமான  தெரு முனை பிரச்சாரக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வானில் விமானம் பறந்தது அந்த சத்தத்தை கேட்ட அனைவரும் மேலே பார்த்தனர். இதனை பார்த்த பொள்ளாச்சி ஜெயராமன் முதலில் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டார்கள், இப்போது பிளைட் விடுகிறார்கள் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி அதிமுக. கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டால் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். தவெக  தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் ஸ்டாலின் போலீஸ் ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.

தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும். கோவையில் இன்று 1635 கோடி ரூபாயில் பெரிய பாலம் கட்டி தொடங்கி வைத்தார். நான்காண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி மதியழகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்... அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு...!

4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அதிமுக என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை. நகைச்சுவை.

ஜனநாயகத்தை காக்க, சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடியார் செய்து வருகிறார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், அதிமுக கூட்டத்தில் தவெகவினர் வந்தது பிள்ளையார் சுழி என்றும் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share