×
 

30 சீட்டு!! ஒரு எம்.பி போஸ்ட்டு!! எடப்பாடிக்கு பிரேமலதா வைக்கும் நிபந்தனை! கூட்டணியில் இழுபறி!

'தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்வதோடு, 30 தொகுதிகள் தர வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நிபந்தனை விதித்துள்ளதால், கூட்டணியில் இணைவதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து சிரமம் எதிர்கொண்டு வருகிறது. பா.ம.க. (அன்புமணி அணி) சமீபத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அறிவித்து விட்ட நிலையில், தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இதனால், அ.தி.மு.க. தலைமை கேட்டபோது, பிரேமலதா பல கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார்.

தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: 2024 லோக்சபா தேர்தலின்போது அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க.விற்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. தற்போது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாகி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஊர்க்காவல் படையில் திருநங்கையர்கள்... பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..!

இதில் இரண்டு இடங்கள் அ.தி.மு.க.விற்கு கிடைக்கும் என்ற நிலையில், பா.ம.க.விற்கு ஒன்றும், த.மா.கா. தலைவர் வாசனுக்கு மீண்டும் ஒன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த பிரேமலதா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன் தம்பி சுதீஷ் அல்லது மகன் விஜய பிரபாகரனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் கறாரான நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இதனால், கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, அ.தி.மு.க. தலைமைதான் இந்த கோரிக்கைகளுக்கு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதா அல்லது வேறு கூட்டணியைத் தேர்வு செய்யப் போகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த இழுபறி தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மும்பை வர்றேன்!! முடிஞ்சா காலை வெட்டுங்க!! தாக்கரே சகோதரர்களுக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share