10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!
தொண்டர்கள் நிதிஷ் குமார் பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தினர். எனினும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இன்று எம்.எல்.சி. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தச் செய்தி பீகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) கட்சியின் தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டு வரும் நிதிஷ் குமார், கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அதிரடி முடிவை அறிவித்தார். கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, “32 ஆண்டுகளாக நிதிஷ் குமார் தனது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் ஜே.டி.யூ.வை கட்டியெழுப்பியுள்ளார்” என்று பாராட்டியிருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
பீகாரில் நீண்டகாலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பரில் 10-வது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்ற அவர், தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: சென்சஸ் கணக்கெடுப்புக்கான தரவுகள்.. டிஜிட்டல் மூலம் சேகரிப்பு..!! சென்சஸ் ஆணையாளர் தகவல்..!!
இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது. தொண்டர்கள் நிதிஷ் குமார் பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தினர். எனினும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இன்று எம்.எல்.சி. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பிறகு, அவரது மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. பீகார் அரசியலில் நிதிஷ் குமார் மிக முக்கியமான தலைவராக விளங்கும் நிலையில், அவரது இந்த முடிவு மாநில அரசியல் சமன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே.டி.யூ. கட்சியினர் நிதிஷ் குமாரின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பாராட்டினாலும், அவரது ராஜினாமா முடிவு கட்சிக்குள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த முதலமைச்சர் யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது பீகார் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!