நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க! திட்டத்தை நிறைவேற்றினால் நிதி!! தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்!
'தமிழக அரசு, மத்திய அரசுக்கு நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. திட்டத்தை நிறைவேற்றினால் நிதி விடுவிக்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: சமரசிக் ஷா திட்டத்திற்கு தமிழகத்திற்கு 2024-25-ம் ஆண்டில் மட்டும் 2,150 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளதாக திமுக எம்.பி. கிரிராஜன் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசியும் இந்த நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மிகுந்த தெளிவாகவும் கடுமையாகவும் பேசினார். “தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்… எந்த மாநிலமாக இருந்தாலும் மத்திய அரசுக்கு ஒரே நிலைப்பாடுதான். சமரசிக் ஷா திட்டத்திற்கு ஏற்கெனவே பாதித் தொகை வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை?” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தையே மேற்கோள் காட்டினார். “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றமே கேட்டது – தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் ஏன் திறக்கப்படுவதில்லை என்று. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தான் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று திமுக ஆளும் தமிழகத்தில் இந்த உயர்தரப் பள்ளிகளுக்கு அனுமதியே இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: என் மனைவியும், பிள்ளைகளும் விஜய்க்கு தான் ஓட்டுபோடுவாங்க! காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படை!! திமுக அதிர்ச்சி!
மிக முக்கியமாக, தமிழக அரசு மத்தியத் திட்டங்களுக்கு “இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது” என்று நிபந்தனை விதிப்பதை ஏற்க முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தார். “இது தமிழகக் குழந்தைகளுக்கான பணம். பிரதமர் மோடி இதை விடுவிப்பதில் முழு உறுதியாக உள்ளார். ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து, ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி திட்டங்களை அமல்படுத்தினால் மட்டுமே முழு நிதியும் கிடைக்கும்” என்று கடிந்துகொண்டார்.
மத்திய அமைச்சரின் இந்த நேரடி எச்சரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “முதலில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுங்கள், பிறகு பணம் பற்றி பேசலாம்” என்கிற தொனியில் மத்திய அரசு தீர்க்கமாக நிற்பதால், ஸ்டாலின் அரசு இனி எந்த முடிவை எடுக்கும் என்பது தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கும் கேள்வியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இந்த ரெண்டுல ஓண்ண தொடுங்க!! தனிக்கட்சியா? தவெக கூட்டணியா? அமித் ஷா முடிவுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ்!