என் மனைவியும், பிள்ளைகளும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவாங்க! காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படை!! திமுக அதிர்ச்சி!
'என் மனைவி, பிள்ளைகள் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடுவர்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரை அதிர வைத்த அதிர்ச்சி தகவல் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்கட்சி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வெடித்தது. “எங்கள் வீட்டு மனைவி, பிள்ளைகள் கூட விஜய்யின் தவெக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம் என்கிறார்கள்” என காங்கிரஸ் முன்னணி தலைவர்களும் எம்.எல்.ஏ-க்களும் நேரடியாகவே புலம்பியுள்ளனர்.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த முக்கியக் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உட்பட பல எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து கருத்துகளைத் தெரிவிக்கும் இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசிய போது திமுக மீதும், தற்போதைய கூட்டணி நிலை மீதும் கடும் அதிருப்தியை கொட்டித் தீர்த்தனர்.
கூட்டத்தில் பேசிய முக்கிய கருத்துகள்:
- “2011-ல் 63 தொகுதிகள் கிடைத்தன. இப்போது அதைவிட அதிக தொகுதிகள் வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் கடுப்பாகி விடுவார்கள்.”
- “முதல்வர் ஸ்டாலினுக்கு நற்பெயர் இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அவர் பேச்சை கேட்பதில்லை. அமைச்சர்கள் காங்கிரஸ்காரர்களை மதிப்பதே இல்லை.”
- “திமுகவிடம் அடிமையாக இருந்து விடக்கூடாது. மக்கள் பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட்டுகள் கூட போராடுகிறார்கள். காங்கிரஸ் ஏன் மவுனமாக இருக்கிறது என மக்கள் கேட்கிறார்கள்.”
- “எங்கள் வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் ‘விஜய்க்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள். கட்சிக்காரங்க வீட்டிலேயே இப்படி இருக்கும்போது சாமானிய தொண்டன் என்ன செய்வான்?”
தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால் புதுச்சேரி, கேரள வெற்றிகளுக்கு உதவும் வகையில் புதிய கூட்டணி அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. திமுகவுடன் தொடர்ந்து இருந்தால் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்பது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரது ஒருமித்த கருத்தாக இருந்தது.
இதையும் படிங்க: அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல! காங்கிரசை கண்டுக்காத விஜய்!! பீகார் முடிவால் பின்வாங்கல்!
2026 தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களே வீட்டுக்குள் விஜய் ஆதரவாளர்களாக மாறிவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா? காங்கிரஸ் தனிக்கட்சியாக போட்டியிடுமா? அல்லது விஜய்யுடன் ரகசிய கைகுலுக்கலா? என தமிழக அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த ரெண்டுல ஓண்ண தொடுங்க!! தனிக்கட்சியா? தவெக கூட்டணியா? அமித் ஷா முடிவுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ்!