×
 

போலீஸுக்கு சுதந்திரம் இல்லை… 2026-ல் இந்த நிலை மாறும் – அருண் ராஜ் உறுதி

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் மாநில அரசை விமர்சித்துள்ளார்.

நாளை ஈரோடு சரலையில் நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் 'மக்கள் சந்திப்பு' நிகழ்விற்காகக் கோவை வந்துள்ள அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசு, காவல்துறை மற்றும் அண்ணாமலை குறித்து அவர் முன்வைத்தார். அவர் பேசியதாவது, 

ஈரோட்டில் நாளை நடைபெறும் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணன் செங்கோட்டையன் சிறப்பாகச் செய்துள்ளார். திமுக இளைஞரணி கூட்டத்திற்கு எந்த விதிமுறையும் இல்லாத நிலையில், தவெக கூட்டங்களை மட்டும் தடுக்க முயற்சி செய்கிறார்கள். சேலத்தில் 40 நிபந்தனைகள் விதித்தவர்கள், ஈரோட்டில் 80-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளனர். எவ்வளவோ தடுத்தும் அதையெல்லாம் தாண்டித்தான் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் அரசின் முதல் கடமை. ஆனால், காவல்துறையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும். தற்போது காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை; இந்த நிலை 2026-ல் கண்டிப்பாக மாறும். எங்கள் கட்சி கூட்டங்களில் பிரியாணி கடையில் தகராறு செய்வதோ, பெண் காவலர்களிடம் அத்துமீறுவதோ போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? தலைவரை அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் முண்டியடிக்கிறார்களே தவிர, வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் முன்னாடியே இப்படியா..?? ஈரோட்டில் அடித்துக்கொண்ட தவெகவினர்..!! என்ன நடந்தது..??

திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்துப் பேசிய அருண் ராஜ், "தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்குச் சான்றான மாநிலம். திருப்பரங்குன்றம் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், திமுக-வும் பாஜக-வும் இதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றன. காவல்துறை நினைத்திருந்தால் இந்தப் பதட்டமான சூழலை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்" என்று சாடினார்.

அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், இன்று இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். ஆட்சியே முடியப் போகிறது, இதுவரை முதல்வர் ஸ்டாலின் ஒரு முறையான செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. அவர் அப்படி ஒரு சந்திப்பை நடத்துவாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

கரூர் பரப்புரை வீடியோக்களை சினிமா ஷூட்டிங்கிற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனம் அருவருக்கத்தக்கது. 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. தலைவருக்கு மக்களைச் சந்திப்பதில் அவ்வளவு விருப்பம் இருக்கிறது, மக்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்" என்று விளக்கமளித்தார்.

நாளை நடைபெறும் ஈரோடு சந்திப்பிற்கு Entry Pass அல்லது QR Code கிடையாது என்றும், பொதுமக்களும் தொண்டர்களும் நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதையும் படிங்க: பிளான் ரெடி… விஜய் சொன்னா போதும்… தேர்தல் பிரச்சாரத்தை நான் பார்த்துக்குறேன்! – செங்கோட்டையன் பேட்டி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share