×
 

தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தேஜ கூட்டணியில் குழப்பங்கள் ஏதுமில்லை என்றார்.

சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு எந்தவித காரணமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடியுடன் நாளை முக்கிய சந்திப்பு இருப்பதால் அந்த மீட்டிங் முடிந்த பிறகு பியூஷ் கோயல் தமிழகம் வருவார். நாளை இரவோ அல்லது நாளை மறுதினமோ அவர் வரலாம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

தேஜ கூட்டணியில் (தமிழக பாஜக – அதிமுக – பிற கூட்டணி கட்சிகள்) குழப்பம் ஏதும் இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது, நயினார் நாகேந்திரன் உறுதியாக மறுத்தார். 

இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

“கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லா கட்சித் தலைவர்களும் டெல்லியில் இருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். மத்திய அமைச்சர் வந்தவுடன் அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிடுவோம்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சமீப நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் கூட்டணி பலம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்திருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த விளக்கம் பாஜகவினருக்கு நிம்மதியை அளித்துள்ளது. 

பியூஷ் கோயல் தமிழகம் வரும் போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவும், வரும் சட்டமன்றத் தேர்தல் உத்திகள் குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சந்திப்பு சில நாட்கள் தாமதமாகும் என்றாலும், கூட்டணி உறுதியாக இருப்பதாக பாஜக தரப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழக பாஜகவினர் இப்போது பியூஷ் கோயலின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அவர் வந்தவுடன் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share