×
 

ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும், உயிரிழந்த விளாத்திகுளம் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு பாஜக சார்பில் நிதியுதவி அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்களின் கண்ணீர் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இதன் விளைவாகவே இந்த அப்பாவி மாணவி குலவிளக்காக பலியானாள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு @BJP4TamilNadupic.twitter.com/iLWg4IUr0k

— Nainar Nagenthran (@NainarBJP) March 18, 2026

குற்றம் நடந்து பல நாட்கள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெருவில் இறங்கி போராடிய பிறகும், போலீஸார் ஒரு குற்றவாளியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். "அறிவாலயத்தின் ஏவல்துறை இயங்குவதால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கே வெட்கக்கேடு" என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். "திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு மீட்கப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறைபாடுகள் ஆகியவை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. மாணவியின் குடும்பத்தினர் நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த அறிக்கை பாஜகவின் தேர்தல் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share