×
 

வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

காங்கிரஸ் காலத்தில் பின்தங்கிய நிலையின் அடையாளமாக இருந்த வடகிழக்கு இந்தியா, தற்போது முன்னேற்றத்திற்கான நுழைவாயிலாக மாறி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஒருகாலத்தில் பின்தங்கிய பகுதியாக கருதப்பட்ட வடகிழக்கு இந்தியா தற்போது நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய நுழைவாயிலாக மாறி வருவதாக தெரிவித்தார்.

மயூர்பஞ்ச் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பொறுப்பை வகிப்பது மாநில மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். அவர் ஒடிசாவின் அடையாளத்தையும் தேசிய அளவில் வலுப்படுத்தியுள்ளதாக பாராட்டினார்.

ஜனாதிபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த கிராமத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அங்குள்ள பள்ளியில் மாணவர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட "பூர்வோதயா" கொள்கையின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய பகுதியாக பார்க்கப்பட்ட வடகிழக்கு இந்தியா, தற்போது வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தப் பகுதிகள் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது ஒடிசா மாநில வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், சில திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டப்பட்டது. இந்த திட்டங்களுக்காக சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் மூலம் ஒடிசாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share