ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!
ராமதாஸ் தொடர்பான கேள்விக்கு சீமான் உணர்வுபூர்வமாக பதிலளித்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சாட்சியோடு மந்திரி ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என்று வேல்முருகன் கூட இருந்துவிட்டு இப்போது வெளியே வந்து சொல்கிறாரே, இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்றும் அவர்கள் ஒரே ரத்தம், ஒரே சொந்தங்கள். இதில் அவர் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார், அதில் நான் கருத்துச் சொல்ல எதுவுமில்லை. ஆனால், இப்போதாவது அந்த குற்றச்சாட்டைச் சொல்லி, 'இவர்களை அடுத்த முறை தேர்வு செய்து விடாதீர்கள்' என்று எச்சரிக்கிறார் அல்லவா? அதை பாராட்டுகிறேன். ஒரு சீட்டுக்காகச் சரணடைந்து எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல், தைரியமாக வெளியே வந்து சொல்வதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்றார்.
எல்லாக் கட்சிகளாலும் கைவிடப்பட்ட ராமதாஸ், இப்போது சசிகலாவோடு இணைந்திருக்கிறார் என்றும் எங்களைப் பார்த்து எல்லாக் கட்சிகளும் பயப்பட ஆரம்பித்துவிட்டன என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த சீமான், எல்லாக் கட்சிகளாலும் கைவிடப்பட்டதாகச் சொல்லாதீர்கள், மக்கள் அவரை கைவிடுவார்களா என்று யோசியுங்கள். அப்படிச் சொல்லாதீர்கள், நான் எல்லாம் அவருடைய பிள்ளை. அவர் இல்லையென்றால் எனக்கு இந்த உணர்வே வந்திருக்காது.
85 வயதில் தமிழைத் தேடி ஒருத்தன் நடக்கிறான் என்றால், அவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? இந்த சமூக நீதி பற்றிப் பேச இங்கே யாருக்குத் தகுதி இருக்கிறது? மண்டல் கமிஷன், 69 சதவீத இடஒதுக்கீடு பற்றிப் பேசியது யார்? இதையெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்ததுதான் என்று தெரிவித்தார். அவர் கனவை நான் நிறைவேற்றுவேன். அப்பன் செய்யாததை மகன் செய்வான். என்னை எல்லாரும் கூட்டணிக் கூப்பிட்டார்கள், நான் போகவில்லை என்றும் அதற்காக நான் அவர்களைக் கைவிட்டேன் என்று சொல்வீர்களா? இந்த வயதிலும் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறாரே, அந்த வேகத்தைப் பாராட்டுங்கள் என்று ராமதாசை பாராட்டினார்.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!
கொரோனா காலத்தை விட ஒரு கடுமையான சூழலை தரப்போவதே அவர்கள்தான் என்றும் அடுத்து வரும் தேர்தலைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். உங்கள் பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றால் ஒவ்வொரு நாடும் மற்றொன்றைச் சார்ந்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் மீது போர் தொடுத்தால் எனக்கு எரிவாயு வருவதில்லை. அதனால்தான் நான் தற்சார்பு பொருளாதாரம் வேண்டும் என்கிறேன். எரிபொருள் தட்டுப்பாடு வந்தால் வண்டியைத் துடைத்து வைத்துவிட்டு சைக்கிளில் தான் போக வேண்டும். நானும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!