முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!
எதிர்க்கட்சிகள் எல்லாம் சூலாயுதமாக இருப்பதாகவும் நான் வேலோடு இருக்கிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்களை அறிவித்த சீமான், தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையையும் தொடங்கியுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், முருகனை நம்பி தான் நான் போர்க்களத்துக்கு வந்து உள்ளேன். எனவே அவரிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும் என இங்கு வந்துள்ளேன்
நல்ல ஆட்சி பிறக்க வேண்டும் என் நாட்டை மாற்ற வேண்டும் என தான் தேர்லுக்கு வந்து உள்ளேன். இன்று முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்.
இதையும் படிங்க: பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!
எல்லா கட்சிகளுக்கும் ஒரே எதிர் கட்சி நாங்கள்தான். இலவசங்கள் தராத ஒரே கட்சி நாங்கள் தான். இலவசம் என்பது ஒரு ஏமாற்றம் அது ஒரு லஞ்சம். நீண்ட காலமாக இலவசங்களை கொடுத்து உள்ளேனர். அதனை மாற்ற வேண்டும் என நடந்து வருகிறோம்.
மற்றவர்களை விட முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்க காரணம் 500 ஆண்டுகாலமாக நாங்கள் மாற்ற வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம் என கூறினார். இன்று முதல் நான் என தேர்தல் பிரச்சாரத்தை திருத்தணியில் இருந்து தொடங்குகிறேன்
இதையும் படிங்க: அப்பனே முருகா..!! திருத்தணியில் தொடங்கும் பிரச்சாரம்... சக்திவேலுடன் மலையேறிய சீமான்..!!