×
 
☰

ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் 'ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி' என்று விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான அனல் பறக்கும் இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவை நோக்கி 'ஓம் சக்தி பராசக்தி' என்று விமர்சனம் செய்த தவெகவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தாங்கள் 'ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி' என்று பிரகடனம் செய்வதாகவும், எந்தவொரு குற்ற உணர்ச்சியும் மனசாட்சியும் இல்லாமல் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் விஜய் நிம்மதியாகத் தூங்கவே முடியாது என்றும் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மிக ஆவேசமாகச் சாடியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தொகுதிகளில் முகாமிட்டுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் தனித் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் தவெக ஆட்சியையும் மிகக் கடுமையாகத் தோலுரித்துப் பேசினார்.

 

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசல் விபத்தை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் என்ன கொடூரம் நடந்தது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் திட்டமிட்ட நேரத்திற்கு வராமல் சுமார் 10 மணி நேரம் காலதாமதமாக வந்ததன் விளைவாக ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி, 10 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 41 அப்பாவி ஏழை எளிய மக்களின் உயிர்கள் கொடூரமாகப் பறிபோயின. அத்தகைய மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்ல மனமில்லாமல், திருச்சியிலிருந்து அவசர அவசரமாக விமானம் ஏறிச் சென்னைக்குத் தப்பி ஓடியவர்தான் இந்த விஜய். திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குக் கூடப் பதிலளிக்கத் துப்பில்லாமல் ஓடி ஒளிந்தார்" என்று ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: மதுராந்தகம் இடைத்தேர்தல்.. ஆரம்பிச்சுடலாமா..? வீரமணி வழக்கை மூடி வைத்தது யார்.? திமுகவை குறிவைத்த ஆதவ் அர்ஜுனா..!!

தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த குதிரை பேர விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், "எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, பொதுநல மனசாட்சியோ இல்லாத ஒருவர்தான் இந்த 'கோடு காளி' முதலமைச்சர் விஜய். புதிய தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களைத் தூக்கிவிட்டார்கள். வெற்றி பெற்ற 10 நாட்களிலேயே தங்களது எம்எல்ஏ பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு அதிமுகவிலிருந்து தவெக பக்கம் தாவிய சந்தர்ப்பவாதிகள், இன்று வெட்கமே இல்லாமல் அதே மக்களிடம் மீண்டும் வந்து ஓட்டுக் கேட்கிறார்கள். 

ஆனால், தொகுதி மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்; தொகுதிக்குள் நுழையும் தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டார்கள். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் எங்களைப் பார்த்து 'ஓம் சக்தி பராசக்தி' என வசனம் பேசினீர்கள்; இப்போது மக்களின் குரலாக நின்று நாங்கள் உரக்கச் சொல்கிறோம்: 'ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி'. இந்த இடைத்தேர்தலில் துரோகிகளுக்கும் ஓடுகாலிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி" என்று அனல் பறக்க முழங்கினார்.

 

 

 

இதையும் படிங்க: மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share