×
 

இந்த பக்கம் நோ என்ட்ரி!! ஓபிஎஸ்-க்கு ரெட் கார்ட் தரும் இபிஎஸ்! முடிவாகுமா கூட்டணி?

ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவரை கூட்டணியில் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளர்.

தமிழக அரசியலில் 'மிஷன் இம்பாசிபில்' என்று கருதப்பட்ட பல சம்பவங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரங்கேறி வருகின்றன. அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்தது போன்ற ட்விஸ்ட்கள் நடந்துள்ள நிலையில், இப்போது ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு விரைவில் நடக்கப் போகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் இடமில்லை என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அவரை கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கட்சியில் எந்த இடமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரம், "மூன்று முறை முதல்வராக இருந்த நான் திமுக போன்ற கட்சிகளுக்கு சென்றால் பெரும் பின்னடைவு ஏற்படும். அதிமுகவில் அவைத்தலைவர் போன்ற பதவி கொடுத்தால் போதும், கட்சியில் தொடர்ந்து பயணிப்பேன்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள வலுவான மாற்று அணியை உருவாக்க பாஜக தேசிய தலைமை தீவிரமாக உழைத்து வருகிறது. அதிமுக வாக்குகள் சிதறாமல் ஒரே திசையில் திரள வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய கணக்கு. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு தனித்து செயல்படுவது வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால், அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்.டி.ஏ கூட்டணிக்கு என்னை யாரும் கூப்புடல!! அப்போ தவெக தானா? ஓபிஎஸ் பேச்சில் சூசகம்!!

ஆரம்பத்தில் ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி, இப்போது அரசியல் யதார்த்தம் காரணமாக நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளார். ஓபிஎஸ் அணிக்கு 2 முதல் 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம், அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிடலாம் என பேசப்படுகிறது. "ஓபிஎஸ் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர விரும்பினால் எங்களுடன் பயணிப்பார்" என்று டிடிவி தினகரன் கூறியது இதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

பாஜகவின் சமரச முயற்சிகள் வெற்றி பெற்றால், 2026 தேர்தல் களம் முற்றிலும் மாறும். "நாளை கூட்டணி முடிவை அறிவிப்பேன்" என்று ஓபிஎஸ் ஏற்கனவே சொல்லியுள்ளதால், அவரது அறிவிப்பு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. "ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு அதிமுகவில் இடமில்லை, கூட்டணிக்கு 3 தொகுதிகள் தருகிறேன், தனி சின்னத்தில் போட்டியிடுங்கள்" என்று எடப்பாடி சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்தால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக தலைமை இந்த ஒன்றிணைப்புக்கு தீவிரம் காட்டி வருவது 2026 தேர்தல் கணக்குகளை பெரிதும் பாதிக்கும்.

இதையும் படிங்க: ஒத்தையில நிக்கிறாரு ஓபிஎஸ்!! அடுத்த விக்கெட்டும் அவுட்!! டிடிவி தினகரன் பக்கத்துல யாரு தெரியுதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share