ஓபிஎஸ்- க்கு எடப்பாடியார் பதில் கொடுப்பார்... வைத்திலிங்கம் உதிர்ந்த செங்கல்... ஜெயக்குமார் பேட்டி...!
ஓ பன்னீர்செல்வத்துக்கு விரைவில் இபிஎஸ் பதிலளிப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்றொன்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையில். 2017-இல் இரு அணிகளும் இணைந்து இரட்டைத் தலைமை அமைப்பை உருவாக்கினாலும், 2022-இல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சி ஒருங்கிணைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.2025-ஆம் ஆண்டின் இறுதியில், அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்தன. ஓபிஎஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து இணைப்புக்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இபிஎஸ்ஸுக்கு டிசம்பர் 15 வரை அவகாசம் கொடுத்து, இணைப்பு நடக்காவிட்டால் தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்வேன் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக இணைப்புக்கு இடமில்லை எனக் கூறி, கட்சியின் பொதுக்குழுவில் அதனை உறுதிப்படுத்தியது.இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர், இபிஎஸ் பொதுச்செயலாளராக இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை எனக் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றோர் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவில் ஒன்றிணைவோம் எனப் பகிரங்கமாகக் கூறினர்.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்போம்... எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய EPS உறுதிமொழி...!
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓபிஎஸ் கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி விரைவில் பதில் அளிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லது தான் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஆதிக்கத்தை சுட்டெரித்த பேரொளி... என்றும் பெரியார் சமூக நீதிப் பாதையில்...! EPS புகழ் மகுடம்...!