×
 

வைகோவுக்கு இப்படியொரு நிலை வரணுமா? - 14 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்...!

கடந்த 2011 இல் நடந்ததை இப்போது வைகோ பேசவேண்டிய அவசியம் என்ன?. தன் மீது குற்றச்சாட்டுகளை கூறினாலும் வைகோ மீதான அன்பு, மரியாதை குறையாது என்று பதிலளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ 2011 ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக ஓபிஎஸ் நான் கூட்டணிக்கு வர மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கூறிவிட்டார்.கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. 

அவ்வாறு ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியதால் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை. மதிமுக அந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். அன்றுதனக்கு எதிராக செய்த தவறுக்காகதான் அதன் பலனை தற்போது அனுபவித்து வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

இதற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா பேசுமாறு கூறியதையே நான் பேசியிருக்கிறேன். அவர் சொல்படியே அனைத்து பணிகளையும் நான் செய்தேன். ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகாலம் உடனிருந்து பணியாற்றி வந்துள்ளேன். 

இதையும் படிங்க: இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!

அண்ணன் வைகோ என்ன பேசினாலும் அவர் மீது அன்போடு இருப்பேன்; மரியாதையோடுதான் இருப்பேன். நான் சொல்லும் பதில் அவர் மனம் புண்படும்படியாக இருக்கும் என்பதால் அந்த பிரச்னைக்குள் போக விரும்பவில்லை.

14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது; அதை இப்போது பேச வேண்டிய நிலை ஏன் அண்ணன் வைகோவிற்கு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் உண்மையைதான் சொல்வேன்; நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால், நான் அதை சொல்வேன். 

என்ன குற்றச்சாட்டுகளை கூறினாலும் வைகோ மீதான அன்பு, மரியாதை குறையாது என்று பதிலளித்தார். வைகோ பேசியது என்ன?

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது, 12 இடங்கள் தான் கொடுப்போம் என என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஜெயக்குமார் தெரிவித்தார்கள். ஆனால் இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து வைகோ கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி விட்டார்கள்.

நான் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அப்போது எனக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செய்த தவறுக்காக தான் அதன் பலனை தற்போது ஓ.பன்னீர் செல்வம் அனுபவித்து கொண்டு இருக்கிறார். ஆனால் எனக்கு 15 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யா சபா இடமும் வழங்க ஜெயலலிதா தயாராக இருந்தார் என்று பிற்காலத்தில் எனக்கு தகவல்கள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா எனக்கு அருமையான ஒரு கடிதம் எழுதி இருந்தார். பிறகு என்னை நேரடியாகவும் சந்திக்க வந்தார். எம் ஜி ஆர் காக கூட ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை. ஆனால் உங்களுக்காக இறங்கி இருக்கிறார் என என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கூறியாதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர் தான் இபிஎஸ்… செங்கோட்டையன் கடும் விமர்சனம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share