சீக்ரெட் சர்வே... கையில் ரிப்போர்ட் உடன் தவெகவிடம் டீல் பேசும் ஓபிஎஸ் வாரிசு...!
ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதே சரியான சாய்ஸாக இருக்கும் தெரிவித்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு இன்னும் ஒரு மாதத்துக்குள் நடைபெறவில்லை என்றால், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்படும் என அவர் அறிவித்தார். “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கட்சியாக மாறும் வாய்ப்பு இருக்கிறது” என அறிவித்தார்.
அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட ஓபிஎஸ், “எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்”, “திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்” என்றார். டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சரி புதிதாக கட்சி தொடங்குவது பிரச்சனை இல்லை, ஏன் திடீரென தேதி எல்லாம் குறிக்கிறார் என விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஓபிஎஸுக்கு ஆதரவாக உள்ள 89 மாவட்ட செயலாளர்கள் கிட்டத்தட்ட கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் புதிதாக கட்சி தொடங்கலாமா?, ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படலாமா? தனிக்கட்சி தொடங்கினால் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: “அமித் ஷா சொன்னா இபிஎஸ் கூட தவெகவில் இணைவார்” - ஒரே நேரத்தில் அதிமுக, பாஜக, தவெகவை பொளந்தெடுத்த ரவிக்குமார்...!
அதற்கு பெரும்பாலான நிர்வாகிகள் தனிக்கட்சி தொடங்கலாம் என்றே தெரிவித்துள்ளனர். சரி தனிக்கட்சித் தொடங்கினால் யாருடன் கூட்டணி வைப்பது என்பதற்கு, பெரும்பாலானோர் பாஜக வேண்டவே, வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். மேலும் நிறைய பேர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதே சரியான சாய்ஸாக இருக்கும் தெரிவித்துள்ளனர். இன்னொருபுறம் முக்குலத்தோர் சமுகத்தின் மிக முக்கிய தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு கொண்டு திமுகவிலும் முயற்சி நடக்கிறதாம்.
ஓபிஎஸ் அந்த பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அவருடைய மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தவெகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளுடன் டீல் பேசிவருகிறாராம். தென்மாவட்டங்களில் ஓபிஎஸுக்கு உள்ள ஆதரவும், இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விஜய்க்கு உள்ள ஆதரவும் இணைந்தால் வர உள்ள தேர்தலில் தனி வரலாறு படைக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளுடன் ஓபிஆர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: செங்கோட்டையன் ராஜினாமா எதிரொலி... விஜய் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை...! வலுக்கும் எதிர்பார்ப்பு...!