“நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!
பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல. நூல் யார் கையில் இருக்கிறது என்பது தான் முக்கியம். அதிமுக கூட்டணிக்கு உண்மையான தலைவர் பாஜக தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் வேலைகளை மும்முரமாக விடுபட்டு கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் .
இதையும் படிங்க: பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!
நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., மாங்குடி, திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திரு சிதம்பரம் திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை தொகுதி பங்கீடு நிறைவடைந்ததாகவும் பேட்டி
இதையும் படிங்க: ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!