×
 

தேர்தல் செலவுக்கு பணம் பதுக்கல்...?! - திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை... அதிர்த்து போன அதிகாரிகள்...!

தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை- திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் வீடு, அலுவலகத்தில் சோதனை- 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பழனி அடுத்த புஷ்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். நிதி நிறுவனம் நடத்தி வரும் மகுடீஸ்வரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை பொது குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மேலும்  பழனி நிதி நிறுவன உரிமையாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் திமுகவில் தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் மகுடீஸ்வரன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் நடைபெற்ற வேட்பாளருக்கான நேர்காணலில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மகுடீஸ்வரன் நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த நிலையில் மகுடீஸ்வரனின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தநிலையில் செய்தியாளரிடம் பேசிய மகுடீஸ்வரன்: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும், தேர்தல் செலவுக்கு பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனை செய்ய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் எதிர்பார்த்து வந்தது போல மகுடீஸ்வரன் வீட்டில் எந்த பணமும் கைப்பற்றப்படாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மீது தான் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்த வந்துள்ளதாக கோடீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

இதையும் படிங்க: விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share