விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!
விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டவுடன் அவரது மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அவரது 23 வயது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி இருப்பதாக கூறினார்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த ஸ்டாலின், அவர் நடத்திய திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை., எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த கருத்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டி காட்டினார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான் என்றும் இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
இதையும் படிங்க: எலெக்ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்., ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே? எனவும் சாரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி என்றும் இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம் எனவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழக வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!