×
 

ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

சட்டசபை தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, ஜோதிடரின் அறிவுரையை ஏற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சுறுசுறுப்பாக பணிகளை துவக்கி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகளில் அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சுறுசுறுப்பாக இறங்கியுள்ளார். ஜோதிடர்களின் அறிவுரையை ஏற்று, தேர்தல் பணிகளை உடனடியாக துவக்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 15-ம் தேதி கூட்டணி பேச்சு தொடங்கினால் தேர்தலில் சாதகமான சூழல் உருவாகும் என பழனிசாமியின் ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியதாக தகவல். அதை ஏற்று நேற்று அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழுவில் மாற்றம் கொண்டு வந்த பழனிசாமி, கூட்டணி பேச்சு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். 

கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கையில், பழனிசாமி தலைமையிலான ஆட்சி மன்றக்குழுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. வேணுகோபால், சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், எம்.பி. இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, வளர்மதி ஆகியோர் அடங்கிய குழு; எம்.பி. தம்பிதுரை தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழு; முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 8 பேர் கொண்ட தேர்தல் விளம்பர குழு; முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 5 பேர் கொண்ட சட்டக்குழு; முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த குழு அமைப்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் தொகுதி பங்கீடு குழுவில் இடம்பெற்றிருந்த தங்கமணி இம்முறை அந்த குழுவில் இடம்பெறவில்லை. 

செய்தியாளர் சந்திப்பு குழுவில் பத்தோடு பதினொன்றாக சேர்க்கப்பட்டுள்ளது அவரை கடுமையாக காயப்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பழனிசாமி-தங்கமணி இடையே நிலவும் பனிப்போர் முற்றியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கமணியின் நிலையை அறிந்த தி.மு.க. தரப்பு அவரை தங்கள் அணிக்கு இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல். 'அ.தி.மு.க.வில் தங்கமணிக்கு தகுதிக்கு குறைவான நிலை தொடர்வதால் அவர் மாற்றி யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளார்' என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க.வில் உள் குழப்பங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் கனவை சுக்குநூறாக உடைத்த சர்வே!! சைலண்டாக காய் நகர்த்தும் விஜய்! சிறுபான்மை வாக்கு வங்கி ரிசல்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share