×
 

பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அதன் பிறகு முடிவெடுத்து பாஜ., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அவரது வருகைக்குப் பிறகு முடிவெடுத்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதில் எந்த காலதாமதமும் இல்லை. அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சென்னை வருகை தருவதாகவும், அதன் பின்னர் புதுச்சேரி செல்ல உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார். பிரதமரை கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கான தொகுதிகள் கிடைக்கல!! கோவத்தில் கொந்தளித்த கோயல்!! கைவிரித்த எடப்பாடி!

திமுக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன், “திமுகவின் தேர்தல் பிரசாரப் பாடல் வரிகள் உண்மையாக இருக்க வேண்டும். பழைய தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். நல்ல ஆட்சி நடத்தியிருக்க வேண்டும். மாநிலத்தில் கஞ்சா இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். ஆனால் இப்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.

மேலும் அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல, ஜீரோ” என்று கடுமையாக விமர்சித்தார்.

பாஜகவின் வேட்பாளர் தேர்வு பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், பியூஷ் கோயலின் வருகைக்குப் பிறகு பட்டியல் வெளியிடப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடியின் சென்னை வருகை பாஜகவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, இந்தத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க முயற்சித்து வருகிறது.

இதையும் படிங்க: இன்று பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு!! வீடியோ கான்பரன்ஸில் கலந்து கொள்ளும் மோடி! அமித் ஷா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share