×
 

மேற்காசியா பதற்றம் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம்!! முக்கிய ஆலோசனை!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது.

தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச சூழ்நிலையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (Cabinet Committee on Security) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட கூட்டம் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு சவால்கள் மற்றும் மேற்காசியாவில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

குறிப்பாக மேற்காசியாவில் நீடித்து வரும் மோதல்கள், அதன் தாக்கம் இந்தியாவின் பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம் மற்றும் அப்பகுதியில் வாழும் இந்தியர்களின் நலன் ஆகிய அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் கருத்துகளை பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு என்பது நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பாகும். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய கொள்கை முடிவுகள் இந்த குழுவிலேயே எடுக்கப்படுவது வழக்கம்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தேசிய பாதுகாப்பு மற்றும் மேற்காசியா நிலவரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

இதையும் படிங்க: 26 ஆண்டுகளாக அழியாத வீர வரலாறு!! கார்கில் வெற்றி நாளில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share