×
 

இன்ஸ்டாவில் பிரதமர் மோடி சாதனை! பிரகாஷ்ராஜ் விமர்சனம்! ஜெலுசில், பர்னோல் குடிங்க! அண்ணாமலை கிண்டல்!

இதனால் ஏதும் பலன் உள்ளதா? மாநிலம் அறிய விரும்புகிறது என அண்ணாமலைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் 10 கோடி (100 மில்லியன்) பாலோவர்ஸ் எட்டிய முதல் அரசியல்வாதி என்ற சாதனையை படைத்துள்ளார். 2014-ல் இன்ஸ்டாகிராமில் இணைந்த மோடி, தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். 

அவரது பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களை இணைத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4.5 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மோடியின் எண்ணிக்கை அவரை விட இரு மடங்குக்கு மேல்!

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து, "இன்ஸ்டாகிராமின் அல்காரிதத்தை பலர் உடைக்க முயல்கின்றனர். ஆனால் நமது பிரதமர் அதை உடைக்கவில்லை, அவர்தான் அல்காரிதம். அவர் வரையறுக்கிறார், உலகம் பின்பற்றுகிறது" என பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சப்தமில்லாமல் மோடி படைத்த அடுத்த சாதனை!! அதிபர் ட்ரம்ப்பே மோடிக்கு அப்புறம்தான்!! இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோவர்ஸ்!

ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு எதிர்வினையாக, "இதனால் ஏதும் பலன் உள்ளதா? மாநிலம் அறிய விரும்புகிறது" என கேள்வி எழுப்பினார். இது பிரகாஷ் ராஜின் பழக்கமான விமர்சன பாணியில் அமைந்தது.

இதற்கு அண்ணாமலை கிண்டலடித்து பதில் அளித்துள்ளார்: "அண்ணா இது தேவை இல்லாத அறிவுரை. இதனால் ஏற்படும் வயிற்று எரிச்சலுக்கு ஜெலுசில், காயங்களுக்கு பர்னோல் உதவியாக இருக்கும்" எனக் கூறி, சிரிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த சாதனை அவரது டிஜிட்டல் தலைமைத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது. உலக அரசியல்வாதிகளில் முதலிடம் பிடித்துள்ளது அவரது செல்வாக்கை காட்டுகிறது. அண்ணாமலை-பிரகாஷ் ராஜ் இடையேயான இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் இன்று அரசியலின் முக்கிய களமாக மாறியுள்ள நிலையில், இத்தகைய சாதனைகளும் விவாதங்களும் தொடரும்!

இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share