×
 

மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

மேற்காசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த சவாலை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் ஜீவார் (Jewar) பகுதியில் ரூ.11,200 கோடி மதிப்பில் 3,000 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) பிரம்மாண்டமாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த இந்த விழாவில் பிரதமர் மோடி, இந்த விமான நிலையம் இந்தியாவின் புதிய வலிமையாக உருவெடுத்துள்ளதாகக் கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், “இந்த விமான நிலையம் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கியாக அமையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான புதிய விமானங்கள் உற்பத்தியாகி வருகின்றன. இது இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ரூ.11,200 கோடி மதிப்பிலான நொய்டா சர்வதேச விமான நிலையம்!! பிரதமர் மோடி திறந்து வைப்பு!! வியக்க வைக்கும் அம்சங்கள்!

மேலும், விமான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் (MRO) துறையில் இந்தியா 85 சதவீதம் வரை வெளிநாடுகளை சார்ந்திருந்த நிலையை மாற்றி, சுயசார்பை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் வெளிநாட்டு விமானங்களுக்கும் சேவை செய்து கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சின் இறுதியில் பிரதமர் மோடி, மேற்காசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலை குறிப்பிட்டு, “இந்த சவாலை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு மோதல் பாதித்த பகுதிகளையே நாம் பெருமளவு சார்ந்துள்ளோம். 

இந்த சுமை நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் மீது விழாமல் அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது குடிமக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று உறுதியாகக் கூறினார்.

டெல்லி-என்சிஆர் பகுதியின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக உருவாகியுள்ள இந்த திட்டம், பயணிகள் நெரிசலை குறைத்து, உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும். சாலை, ரயில், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், பிராந்திய வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.11,200 கோடி மதிப்பில் சர்வதேச ஏர்போர்ட்!! உ.பி நொய்டாவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share