×
 

நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்!! பிரதமர் மோடி பிறப்பித்த அதிரடி உத்தரவு! கண்டிப்பு!

முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் சுமார் நான்கரை மணி நேரமாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உடனேயே, முக்கிய துறை அமைச்சர்களுடன் நீண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் விவசாயம், வனம், தொழிலாளர் நலன், சாலைப் போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், வெளியுறவு, வர்த்தகம், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு அமைச்சகமும் தங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தினார். நிர்வாகம் என்பது மக்களின் வசதி மற்றும் பொது நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறினார்.

கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும், தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட பிரதமர், “2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் லட்சியத்துடன் ஒவ்வொரு அமைச்சரும் பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார். அரசின் செயல்பாடுகளில் அதிக செயல்திறன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ள முக்கிய சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைச்சர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொழில் செய்வதை எளிதாக்குதல், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற நமது கனவை நனவாக்குவதற்கான மேலும் புதிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசின் செயல்பாடுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பிரதமரின் இந்த அதிரடி உத்தரவுகள், மத்திய அரசின் நிர்வாக இயந்திரத்தை மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share