ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம்!! தேஜ கூட்டணியுடன் தமிழ்நாடு!! ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி!
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23, 2026) தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் முதல் மிகப்பெரிய பிரசார நிகழ்வாக அமைகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு), அமமுக (டிடிவி தினகரன்), தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே. வாசன்), இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணி ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியேற்றுள்ளது.
பிரதமர் மோடியின் பயண அட்டவணைப்படி, கேரளாவிலிருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைவார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் சென்று, கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்குவார்.
இதையும் படிங்க: இலவம் காத்த கிளி தேமுதிக!!! 21 தொகுதி ஒரு எம்.பி சீட்டு!! பிரேமலதா போட்டு வைத்த அரசியல் கணக்கு!
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
— Narendra Modi (@narendramodi) January 23, 2026
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய…
மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். உரை முடிந்ததும் மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பி, அங்கிருந்து டெல்லி புறப்படுவார். மொத்தம் 3 மணி நேரத்திற்குள் இந்த சுற்றுப்பயணம் நிறைவடையும்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை-திருச்சி GST சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று பாதைகளைப் பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த கூட்டம் திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கூட்டணியில் இணைந்த டிடிவி!! நேரில் சந்திக்க முரண்டு பிடிக்கும் எடப்பாடி! பரபரக்கும் அரசியல் பின்னணி!