தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வர உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். தென் தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தருகிறார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டத்துக்கு வரும் திட்டம் உள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் சட்டசபை தேர்தலில் போட்டி? ராசிபுரமா? தாராபுரமா? பாஜக தீவிர ஆலோசனை!
பிரதமர் மோடி ஒரே பொதுக்கூட்டத்தில் 22 வேட்பாளர்களை ஆதரித்துப் பேச உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள், நெல்லை மாவட்டத்தில் 5 வேட்பாளர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 5 வேட்பாளர்கள் என மொத்தம் 22 பேருக்கு ஆதரவாக ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளார்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்காக பெரிய இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளச்சல் தொகுதியில் உள்ள பேயோடு பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பா.ஜ.க. குமரி மாவட்டத் தலைவர் கோபக் குமார், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் வருகை தென் மாவட்டங்கள் முழுவதும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமரின் பிரசாரம் கூட்டணிக்கு பெரும் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தென் முனையில் பிரதமர் மோடியின் வருகை தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்யும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!