இது மோடி பொங்கல்! தமிழ்நாடு விசிட் கன்ஃபார்ம்! அடுத்தடுத்து அமித் ஷா போட்டு வைத்த மாஸ்டர் ப்ளான்!
தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை தர உள்ளார். ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் வந்து கொண்டாட அவர் முடிவு செய்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் இணைந்து, கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூர் அல்லது ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் மக்களுடன் பொங்கல் கொண்டாட உள்ளார். அவருடன் ஒரே நேரத்தில் 10,000 மகளிர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தமிழக பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பிரதமர் மோடி ஜனவரி 10 அல்லது 12-ஆம் தேதி தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த பொங்கல் கொண்டாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தும்” என்றார்.
இதையும் படிங்க: அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!
மேலும், சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடக்கின்றன. இதில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் பகுதியாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம் நடக்கும் இந்த சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.
பொங்கல் விழா, மெட்ரோ தொடக்க விழா, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: புட்டபர்த்தியில் கிடைத்த அனுபவம்!! ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!