×
 

அடுத்த மாசம் கூட்டணி அறிவிப்பு!! ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்! பாமக தொண்டர்கள் உற்சாகம்!

கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் பங்கேற்கும் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், 108 மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரம், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், “வரும் டிசம்பர் 30-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசலில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, அவர்களது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கூட்டணி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் ராமதாஸ் - அன்புமணி!! முட்டி மோதி முட்டுக்கொடுக்கும் அதிமுக - பாஜக!

மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 12-ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.

பா.ம.க.வில் தற்போது நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கும் இடையே பிளவு நிலவுவதால், இந்தக் கூட்டமும் பொதுக்குழுவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டிசம்பர் 30-ல் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, பா.ம.க.வின் எதிர்காலத்தையும், 2026 தேர்தல் கூட்டணியையும் தீர்மானிக்கும் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு என்ன வேணும்னு கேளுங்க!! ஒன் டூ ஒன் பேசுங்க! ராகுல்காந்தி சீக்ரெட் ஆர்டர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share