×
 

யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

பாட்டாளி மக்கள் கட்சியின் வேரூம், வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது தலைமையின் கட்டுபாட்டிற்கு கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையில் 40 க்கும் மேற்பட்டமீன்வர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வினை கானும் படி தமிழக அரசுக்கு வலியுறுத்துவதாக கூறிய  அவர், 
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

வேளான்மை துறை தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை  தனித்தனியாக சந்தித்து வேளான் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது  முறையல்ல.
உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி திட்டம் செயல்படுத்தவில்லை விவசாயிகளுக்கும் வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும் என்றார். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது கடந்த சில தினங்களாக தரைத்தளத்தினை பெயர்த்து எடுத்து மொசைக் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் இந்த நூலகத்திற்கு குடிமைபணிக்கும், நூலகத்திற்கும் வந்து செல்பவர்களுக்கு முன்னரே இந்த பணி குறித்து தெரிவித்திருக்க வேண்டும் என்றார். 

இதையும் படிங்க: நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்...!

பாட்டாளி மக்கள் கட்சியின் வேரூம், வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது தலைமையின் கட்டுபாட்டிற்கு கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாக உள்துறைக்கும் காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் என்ற அடைமொழி என்று யார் இருந்தாலும் ஏற்க கூடாது. நான் மட்டும் தான் தலைவர். அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது எனக்கூறினார். 

இதையும் படிங்க: ராமதாஸுக்கு அன்புமணி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்... எதிர்ப்பை மீறி தொடங்கிய எழுச்சி பயணத்தில் ட்விஸ்ட்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share