×
 

உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

எம்எல்ஏ என்று பார்க்க மாட்டேன். எம்எல்ஏனா தூக்கி கடல்ல வீசருவேன்.உங்களுடைய கணக்கு கண்காணிக்கப்படுகிறது. 

தனித்தனியாக யானை சின்னத்திலே நின்று நாலு தொகுதியிலே வெற்றி பெற்றோம்.  4 தொகுதியில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நமக்கு வெட்கமாக இல்லையா? அசிங்கமாக இல்லையா? கோபம் வரலையா? ஏன்னா அவன்வன் நம்மாள நம்மாளே காட்டி கொடுத்துட்டான். நம்மாள் நமக்கே ஓட்ட போடல, என்ன செய்யுறது. அதனாலே இனி அப்படி இருக்கக்கூடாது. 

அப்படி நீங்கள் ஏதாவது இருந்தீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொருவருடைய கணக்கையும் முடித்து விடுவேன். அப்படின்னா என்ன அர்த்தம் உங்க பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. வேறு ஒரு நல்ல பையனை ரியல் எஸ்டேட் செல்போன் வச்சியிருக்காத  நல்ல பையனை, குடிக்காத பையனை,  நீதான்டா மாவட்டம் என தேர்வு செய்வேன். எம்எல்ஏ என்று பார்க்க மாட்டேன். எம்எல்ஏனா தூக்கி கடல்ல வீசருவேன்.   உங்களுடைய கணக்கு கண்காணிக்கப்படுகிறது. 

 உங்களை பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது. சும்மா ஏமாத்திட்டு நான் கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன்னா எங்க போறது? கோட்டை போய் கிட்ட நின்னு வெளியே நின்னு பாத்துட்டு வரலாம். உங்களை நம்பி தேர்தல்ல இறங்கினால் அவ்வளவுதான். சில பேர் கேக்குறான் எங்க கூட்டணி எங்க கூட்டணின்னா கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன். நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம். உனக்கு சீட்டு கிடைக்கணும். நீ எம்எல்ஏ ஆகணும்னா நாளையில் இருந்து மக்களோட மக்களா போய் உழை. உன்னுடைய உழைப்பை பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது. மறைமுகமாக சமூக முன்னேற்ற சங்கத்தின் மூலமாக எடுக்கப்படுகிறது. அதனாலே இந்த கணக்கிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. 

இதையும் படிங்க: 'கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ்' - ஸ்டாலினை கிழிகிழியென கிழித்த வழக்கறிஞர் பாலு...!

இதையும் படிங்க: பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share