×
 

பொண்டாட்டி, பிள்ளைங்க போனாலும் பரவாயில்லன்னு கவுந்து படுத்துக்கிட்டு... விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்...!

அரசியல் என்பது அது தனிப்பட்ட வாழ்க்கை என்று உதறிவிட்டு போக முடியாது. அரசியல் என்று வந்துவிட்டால் அது பொது வாழ்க்கை.

சிவகாசியில் விருதுநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின்  தலைவர் நடிகர் கருணாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-  பாஜக என்பது எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். நாளை விஜய் மூஞ்சில் கூட ஒட்டிக்கொண்டு வருவார் பிரதமர் நரேந்திர மோடி. விஜய் மூஞ்சில் மோடி மூஞ்சியோடு விஜய் வருவார். அதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. அவருக்கு எது போனாலும் பரவாயில்லை ஐ டோன்ட் கேர் என்கிறார். பொண்டாட்டி போனாலும், பிள்ளை போனாலும் பரவாயில்லை என்கிறார். பெண்களும் தன்னை சார்ந்து உள்ளவர்களும் நாசமாக போகட்டும் என்று நினைக்கிறார். உங்களைச் சார்ந்து இருக்கிறவர்களுக்காவது நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் என்பது அது தனிப்பட்ட வாழ்க்கை என்று உதறிவிட்டு போக முடியாது. அரசியல் என்று வந்துவிட்டால் அது பொது வாழ்க்கை. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அடிப்படை ஒழுக்கம் தேவைப்படுகிறது. எத்தனையோ பேருக்கு உதவி செய்த சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ், செல்வராஜ், காமராஜ்  உள்பட யாருமே இன்று அவருடன் இல்லை.

தளபதி மு. க. ஸ்டாலின் போன்ற மாவீரன்   இன்று தமிழ்நாட்டிற்கு தேவை. 100 மோடி வந்தாலும் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரே தைரியமிக்கவராக இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் தான் இருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னோடியான ஒரு முதலமைச்சராக அவர்தான் இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். வட இந்தியாவில் முக்கால்வாசியை மற்ற கட்சிகளை அழித்து, அழித்து  பாஜக கைப்பற்றி விட்டது. அதே மாதிரி எடப்பாடியையும் பிஜேபி காலி செய்து  அழித்துவிடும். வட்டச் செயலாளர் வண்டு முருகனாக எடப்பாடி மாறுவது உறுதி- உறுதி. மனசாட்சி உள்ள சோற்றிலே உப்பு போட்டு சாப்பிடக்கூடிய சூடு, சொரணை, வெட்கம், மானம் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனும், இனத்துரோகி எடப்பாடி பழனிச்சாமியை வட்டச் செயலாளர் வண்டு  முருகனாக மாற்றுவார்கள். எம்எல்ஏ பதவி என்பது மக்கள் கொடுக்கும் மனுக்களை அரசு அதிகாரிகளிடமோ, கடைசியாக முதலமைச்சரிடமோ கொடுக்கக் கூடிய வேலை தான் எம்எல்ஏ வேலை. பிஜேபி யை மட்டும் நம்பி விடாதீர்கள். அவர்கள் மிகப்பெரிய மடைமாற்று- துரோகிகள். எந்த மாறு வேடத்தில் வந்தாலும் பாஜகவை மட்டும் நம்பி விடாதீர்கள். நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம். நம் தலையில் நாமே பெட்ரோல், டீசல் ஊற்றி கொளுத்திக் கொள்வதற்கு சமம்.

நடப்பாண்டியன் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லி அரசுக்குமான ஒருபோர். மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் தன்னுடைய பிரச்சினையாக கருதி பிரச்சனைகளை தீர்க்க வேண்டியவர் முதல்வர். கரூரில் 41 பேர் இறந்தார்கள் என்றால் கவுந்தடித்து படுத்து கொள்பவ ராமுதல்வர். எந்த நேரத்திலும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் உடனே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் போய் ஆறுதல் கூறியவர் தான் முதலமைச்சர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறித்து அறியாமல் கவுந்து அடிச்சு படுத்துக்கொண்டு  தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்ற வண்டு முருகன் எடப்பாடி பழனிச்சாமியா? முதல்வர். 2016 -ல் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரும் வாக்களிக்க வில்லை. வாக்களிக்கவும் மாட்டார்கள்.

இதையும் படிங்க: எதே... இபிஎஸ் பாஜக வட்ட செயலாளரா?... அதிமுக பொதுச்செயலாளரை அசிங்கப்படுத்திய கருணாஸ்...!

மக்களுக்காக மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக வெற்றி பெற்றவர்கள் பலர் அரசு உயரதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ளனர். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும், முதல்வர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஒரு முதலமைச்சரை நாம் இழந்து விடக்கூடாது.

திராவிட மக்களை அதிலும் குறிப்பாக தமிழர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு தமிழர்களின் பெருமைகளை ஏற்க மறுக்கின்ற, தமிழ் மொழியை அழிக்க நினைக்கின்ற, சமஸ்கிருத மொழியை வளர்க்க கோடி கோடியாக செலவழிக்கும் ஒன்றிய அரசை எதிர்ப்பாக காட்டுங்கள். தமிழ் மொழியை, தமிழ் மக்களை, தமிழ்நாட்டை அழிக்க, நசுக்க, முடக்க நினைக்கக்கூடிய பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலே காலூன்றி விடக்கூடாது என்பதிலே மனதில் உறுதியாக வைத்திருந்து, தமிழர்களுக்காக குரல் கொடுத்து பாதுகாக்க கூடிய அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காத திராவிட முன்னேற்றக் கழக நிரந்தர முதல்வர் மு. க. ஸ்டாலின் தான் மீண்டும் 2026 -ல் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும். என்றார்.

இதையும் படிங்க: தேர்தல் வேலை இருக்கு...! சிபிஐக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share