பொள்ளாச்சியில் 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? - திடீர் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம்...!
பொள்ளாச்சியில் தற்போதைக்கு அத்தியாவசிய அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ரத்து குறித்து அதிகாரிகள் விளக்கம்
தூர்வாரும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியீட்டில் முறைகேடு புகாருக்கு தட்டச்சுப் பிழை என விளக்கம் கொடுத்த அதிகாரிகள் டென்டிரை தற்போது ரத்து செய்துள்ளனர்.
பொள்ளாச்சிலை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில் ஆழியார் வடி நிலக்கோட்டம் பொள்ளாச்சியின் கீழ் உள்ள பரம்பிக்குளம் பகுதிகளான பயிர் மன கால்வாய்,பொள்ளாச்சி,பல்லடம் பொங்கலூர் உள்கோட்ட பகுதிகளில் கால்வாய் செடிகளை அகற்றும் பொருட்டு 10 லட்சத்திற்கும் உட்பட்ட மதிப்பீட்டில் ஒன்பது பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேலும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பின் மூலம் 13 பணிகளுக்கும் இணையதளத்தின் கோட்டளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பத்து லட்சத்திற்கும் உட்பட்ட மதிப்பீட்டின் டெண்டர் கோரப்பட்டுள்ளது.முறையாக ஜூலை 20 மற்றும் 27ஆம் தேதிக்குள் இரண்டு டெண்டர் அறிவிப்புகளுக்கான காலம் முடிவடைகிறது.இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அன்று இணையத்தின் குறிப்பிடப்பட்ட டெண்டர்கள் குறித்த நிபந்தனைகளில், site visit certificate பெறுவது அவசியம் எனவும்,குறிப்பிட்ட டெண்டர்கள் லிமிடெட் டெண்டர் எனவும் கூறப்பட்டுள்ளதாக தனிப்பட்ட அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: பல்லடம் சுடுகாட்டில் நரபலியா?... அச்சத்தில் உறைந்த மக்கள்... குழி தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
இது குறித்து ஆழியார் நீர்வளத்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் கூறுகையில்,குறிப்பிட்ட டெண்டர் காரணமாக எழுந்த புகார் தட்டச்சுப் பிழை காரணமாக தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும் இந்த பிழை ஏற்கனவே கண்டறியப்பட்டு 14ஆம் தேதி அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் டெண்டர்கள் குறித்து உரிய நிபந்தனைகள் உடன் புதிய அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த டெண்டர்கள் அனைத்தும் பத்து லட்சம் மதிப்பீட்டிற்கு கீழ் வருவதால் லிமிடெட் டெண்டர் என கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.,இந்நிலையில் நேற்றுடன் டெண்டர் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கடந்த 17ஆம் தேதி இந்த டெண்டர்கள் முறையாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பருவநிலை மாற்றம் காரணமாக தாமதமாகும் மழை காரணமாகவும் தற்போதைக்கு அத்தியாவசிய பணிகளின் அடிப்படையில் தூர் வாரும் பணி தேவையில்லை எனவும் கூறி அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!