"விழித்துக் கொண்டால் பிழைத்து கொள்வார்" ... சி.எம். விஜய்யை எச்சரித்த பொன்.ராதாகிருஷ்ணன்...!
தேர்தல் கமிஷனுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.
ஊழல் இல்லாத ஆட்சி என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அரசு வக்கீல்கள் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக புகார் வந்து அதை விசாரிக்கும்படி கோர்ட்டு கூறியுள்ளது. ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கலாம். அதை அவருடன் கைகோர்த்து நிற்பவர்கள் நினைக்கிறார்களா என்பது கேள்விக்குறி. முதல்வர் விஜய் விழித்துக் கொண்டால் பிழைத்து கொள்வார் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக பூதாகரமான பிரச்சினைகளை உருவாக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரங்களை கூறி வருகின்றனர். நம்முடைய நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை 13 எஸ்.ஐ.ஆர்.கள் நடந்துள்ளன. அப்போது எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட்டது கிடையாது.
ஆனால் தற்போது எஸ்.ஐ.ஆர். முறையை கொச்சைப்படுத்த கூடிய பல முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் கமிஷனுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். எப்படி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதேபோல தேர்தல் கமிஷனுக்குள் இருக்கக்கூடிய விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தாராபுரத்தில் இன்று களமிறங்கும் விஜய்... நிபந்தனைகள் என்னென்ன?
கரப்பான் பூச்சி கட்சி கட்டாயமாக காங்கிரசை கொல்லாமல் விடாது. அவங்களுடைய முதல் எதிரி காங்கிரசாகத்தான் இருக்க முடியும். ஏன் எனில் அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு என்றால் ஜனநாயகத்தினுடைய விரோதியாக இருக்கும் ராகுல் காந்தியை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. கரப்பான் பூச்சி கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வலியுறுத்தி இருக்கிறார்கள். அவருடைய பணிக்காலம் முடியும் போது கட்டாயமாக அவர் மாறுவார்.
ஊழல் இல்லாத ஆட்சி என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அரசு வக்கீல்கள் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக புகார் வந்து அதை விசாரிக்கும்படி கோர்ட்டு கூறியுள்ளது. ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கலாம். அதை அவருடன் கைகோர்த்து நிற்பவர்கள் நினைக்கிறார்களா என்பது கேள்விக்குறி. அவர்களுக்கு நிறைய கை இருப்பதால் நிறைய பை தைத்து போட்டுள்ளார்கள்.
பல விஷயங்களில் தவறு நடக்கிறது. விஜய் விழித்துக் கொண்டார் என்று சொன்னால் பிழைத்துக் கொள்வார். தினமும் 10 கொலையாவது நடக்கிறது. அவர்கள் தவறை நோக்கித் தவழ்ந்து செல்லவில்லை. 100 மீட்டர் பந்தயத்தில் ஓடுவது போல ஓடுகிறார்கள். ஜெம் வீரமணி ஒரு முதலஅமைச்சருடைய காலத்தில் நடந்த விஷயம் அல்ல. எம்.ஜி.
ஆர். காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்.
இப்போது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றால் கோர்ட்டு கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். நிதி பற்றாக்குறை இருக்கின்ற இந்த நேரத்தில்தான் தலைமைச் செயலக கட்டிடம் தேவையா?. இன்றைய தேவை த.வெ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல விமான நிலையம் வேண்டும். பரந்தூர் விமான நிலையம் என்று இல்லை. எங்கு வேண்டுமானாலும் கொண்டு வரலாம். தி.மு.க. ஆட்சிக்கும், த.வெ.க. ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்கள். அந்த அரசில் ஊழல்கள் இருந்திருக்கலாம். தவறுகள் இருந்திருக்கலாம். அந்த அரசாங்கத்தை ஒரு காலமும் நாம் போற்ற முடியாது. ஆனா காமெடி சீன் நடத்திட்டு ஒரு அரசாங்கம் நடத்தக்கூடாது.
தமிழக முதல்-அமைச்சர் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று சொல்கிறார்கள். நான் ஒரு காலத்தில் ஒரு சினிமா பார்த்தேன். அந்த காமெடி சீனில் அமெரிக்க ஜனாதிபதி வாழ்க என்று கூறுவார்கள். 4 மாநில முதல் மந்திரிகள் தோல்விக்கு எஸ்.ஐ.ஆர். காரணம் இல்லை. அவர்கள் செய்த வினைதான் காரணம் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: “யார் உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது”... சி.எம். விஜயை கேள்விகளால் கிழித்தெடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்...!