×
 

புதுச்சேரி தொகுதிப் பங்கீடு அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியா? ... விழித்துக் கொள்வாரா எடப்பாடி பழனிசாமி...?

புதுச்சேரியில் திராவிட கட்சிகள் அதிக அளவில் ஆட்சி அமைக்காவிட்டாலும் தேசிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணியாக திகழ்ந்துள்ளன.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணையில் அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியை பாஜாக்க முழுமையாக கபளிகரம் செய்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கிறார்கள். 

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் 10 முறை ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு அடுத்த இடங்களில் திமுகவும் அதிமுகவும் உள்ளன. திமுக நான்கு முறையும் அதிமுக இரண்டு முறையும் புதுச்சேரியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் காங்கிரஸிலிருந்து பிரிந்து என்ஆர் காங்கிரஸை தொடங்கிய ரங்கசாமி இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளார். 

புதுச்சேரியில் திராவிட கட்சிகள் அதிக அளவில் ஆட்சி அமைக்காவிட்டாலும் தேசிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணியாக திகழ்ந்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரை கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் என்ஆர் காங்கிரஸுக்கு பக்கபலமாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜக்கவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் கிட்டத்தட்ட கபளீகரம் செய்யப்பட்ட நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க: கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!

2016 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து 30 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. தற்போது 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுக்கு வெறும்  இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சிக்கு இணையாக இரண்டு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒருமுறை கூட ஆட்சிக்கு வர இயலாத பாஜக ஆதிமுகாவை கபளீகரம் செய்து அந்த இடத்தை பிடித்து விட்டதாக கூறும் அரசியல் நோக்கர்கள் தமிழ்நாட்டில் அதிமுகவின் எதிர்காலத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share