“அப்போ இல்லாத ரோசம்... இப்போ ஏன் வருது...?” - மாணிக்கம் தாகூருக்கு எதிராக போஸ்டர்கள்.... இரண்டு துண்டாகும் காங்கிரஸ்...!
மேலூர் பகுதிகளில் மாணிக்தாகூர் எம்.பிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாணிக்கம் தாகூர். விருதுநகர் மக்களவை தொகுதி பிரதிநிதியான மாணிக்கம் தாகூர், சமீபகாலமாகவே திமுகவிற்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆதரவு இல்லையென்றால், திமுகவால் ஆட்சியில் நீடிக்க முடியாது. எங்க ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என விமர்சித்தது. திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு உரிய மரியாதை மற்றும் ஆட்சியில் பங்கு தரவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியது என மாணிக்கம் தாகூரின் கருத்துக்களால் அரசியல் களமே அனலாய் தகிக்கிறது.
அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாணிக்கம் தாக்கர் மீது புகார் கொடுக்க நேரடியாக பெங்களூரு சென்று அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேயிடம் புகார் எல்லாம் கொடுத்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தனது தமிழக பயணத்தின் போது கூட, கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது, பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றார். ஆனால் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்ற கெத்தில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் மாணிக்கம் தாகூரை கடுமையாக சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸில் கோஷ்டி பூசல் புதிதல்ல என்றாலும், தற்போது போஸ்டர் யுத்தத்தில் கதர் சட்டைகள் களமிறங்கியுள்ளன. மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் விருதுநகர் எம்.பி மாணிக்தாகூருக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில், "கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரின் "எம்.பி யின் வாயில் இருந்து ம...ர்" என்ற வார்த்தை வரலாமா..!?" என்றும். "ஈவிகேஎஸ், அழகிரி, திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் இருந்த போது வராத ரோசம் தற்போது ஏன்..!? என்று கேள்வி எழுப்பியும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது."
இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே... விடிந்ததும் மாணிக்கம் தாகூர் கொடுத்த அதிர்ச்சி... ஆடிப்போன காங்கிரஸ் தலைமை... !!
மேலும் அந்த சுவரொட்டியில், "கூட்டணி கட்சிக்குள் குழப்பத்தையும், கட்சி தலைமையின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்கும் மாணிக்தாகூர் எம்.பி-யை கண்டிக்கின்றோம்" என தெரிவித்து சுவரொட்டிகள் மேலூரில் ஒட்டப்பட்டுள்ளன. தற்போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்தாகூர் பேச்சுக்கு உட்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அச்சமில்லை! அச்சமில்லை!! காங்., எம்.பி கறார்! திமுக கூட்டணிக்கு ஆட்டம் காட்டும் மாணிக்கம் தாகூர்!