×
 

தவெக விஜயை சமாளிக்க முடியாமல் திணறும் உதயநிதி ஸ்டாலின்! திமுகவை கட்டுப்பாடுத்த மூன்று தரப்பினர் முயற்சி!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில், தி.மு.க.,வில், மூன்று தரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னை: எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலினை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூன்று தரப்பினர் இடையே தி.மு.க.வில் தீவிர போட்டி நிலவி வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உள் போட்டி உதயநிதியின் அரசியல் செயல்பாடுகளை பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது மருமகன் சபரீசனும், ‘பென்’ நிறுவன இயக்குநர் மணிகண்டனும் இதுவரை தங்கள் செல்வாக்கில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உதயநிதி ஆரம்பத்தில் இருந்தே தனி பாதையில் சென்றதால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. 

தற்போது கட்சியின் முக்கிய முகமாக உதயநிதி உருவெடுத்துள்ள நிலையில், அவரை தங்கள் வசப்படுத்த சபரீசன் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ‘பென்’ மணிகண்டனை உதயநிதி விரும்பாததால், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை அவருக்கு அறிமுகப்படுத்தி செல்வாக்கு செலுத்த முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

மற்றொரு தரப்பில், உதயநிதியின் நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் மகேஷ், தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து தனது நிலையை பலப்படுத்த முயற்சிக்கிறார். திருச்சியில் செல்வாக்கை இழந்த அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் நேரு உதயநிதியுடன் நெருங்குவதை கவலைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் உதயநிதியை தன் பக்கம் இழுக்க மகேஷ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மூன்றாவது தரப்பாக, இளைஞரணியினர் செயல்படுகின்றனர். உதயநிதி வசிக்கும் ‘குறிஞ்சி’ இல்லத்தில் இதுவரை இளைஞரணி நிர்வாகிகள் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது உதயநிதி பல்வேறு நிர்வாகிகளை சந்திப்பதால் அவர்களின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. எனவே இளைஞரணியினர், உதயநிதியின் தனி உதவியாளர் செந்தில் தலைமையில் தனிக் குழு அமைத்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த மூன்று தரப்பு போட்டியும் உதயநிதியைச் சுற்றி புகைச்சலை ஏற்படுத்துவதாகக் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. ‘குறிஞ்சி’ இல்ல அணிக்கும், அன்பகம் இளைஞரணிக்கும் இடையேயான பனிப்போர் உதயநிதியின் வேகத்தைக் குறைப்பதாகவும், இவற்றை ஒன்றிணைத்தால் மட்டுமே அவர் முழு வீச்சில் செயல்பட முடியும் என்பதும் கூறப்படுகிறது.

இந்த உள் மோதல் தி.மு.க.வின் எதிர்க்கட்சி பணிகளை பாதிக்கிறதா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்! உதயநிதி! எடப்பாடி பழனிசாமி! சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share