×
 

பீகார் தேர்தல் ரிசல்ட் இப்பவே தெரிஞ்சிடுச்சே... ஸ்டாலின் பார்முலாவால் சர்ச்சையில் சிக்கிய பிரசாந்த் கிஷோர்... வைரல் வீடியோ..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபூதியை அழித்து சர்ச்சையில் சிக்கியதைப் போல், பிரசாந்த் கிஷோர் குங்குமத்தை அழித்து வசமாக சிக்கியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமரும். 

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத் பந்தன் ஆகிய இருபெரும் கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதுதவிர ஜன் சூரஜ் கட்சி, ஏஐஎம்ஐஎம், ஜன்சக்தி ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சி, ஆசாத் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

பீகார் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி தீயாய் வேலை செய்து வருகிறது. இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தாலும், இதுவரை அவரது கட்சி சார்பில் 116 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்... பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு...! 

இதனால் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்தவகையில் பீகார் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற பிரசாந்த் கிஷோருக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண்மணி ஆரத்தி எடுத்துவிட்டு, பிரசாந்த் கிஷோருக்கு குங்குமம் வைத்து விடுகிறார். அதனை போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக ஏற்றுக்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், அந்த பெண்மணி நகர்ந்த மறுகணமே அழித்துவிடுகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 

ஸ்ரீரங்கம் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விபூதியை அழித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல் திருமாவளவனும் கோயில் ஒன்றில் தனக்கு வைக்கப்பட்ட திருநீரை அழித்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். “விபூதி வேண்டாம்... இந்துக்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?” என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சகட்டுமேனிக்கு விமர்சித்தன. 

தற்போது இதே நிலை தான் பீகார் தேர்தலில் களம் கண்டுள்ள பிரசாந்த் கிஷோருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வாக்காளர் பெண்மணி வைத்த குங்குமத்தை அழித்ததுள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், இந்துக்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?, சிறுபான்மையினரின் ஓட்டுக்களுக்காக இந்துக்களை அவமதிக்கிறாரா? என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். பிரசாந்த் கிஷோர் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எல்லாம் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியவர். அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி விபூதியை, குங்குமத்தை எல்லாம் நெற்றில் வைத்தை அழிப்பதெல்லாம் கைவந்த கலை. அதேபாணியை பிரசாந்த் கிஷோரும் பின்பற்றினால் பீகார் தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வுவார் என கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

A lady put Tilak on Prashant Kishor.

Prashant Kishor got photos clicked and then wiped the Tilak.

Already behaving like Congress pic.twitter.com/T74Yc48llq

— Ankur Singh (@iAnkurSingh) October 17, 2025

இதையும் படிங்க: கனமழை எதிரொலி... சனீஸ்வரன் கோவில் கருவறைக்குள் புகுந்த மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share